ரொம்ப நம்பி ஏமாந்துவிட்டேன்..3 வருஷமா அனுபவித்து வருகிறேன்!! நடிகை அனன்யா ஓபன் டாக்..
அனன்யா நாகல்லா
தெலுங்கான மாநிலம் கம்மம் மாவட்டம் சத்துப்பள்ளியை சேர்ந்த அனன்யா நாகல்லா, சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

நடிப்பின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக குறும்படங்களில் நடித்தவர், பின் மல்லேஷம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். அதன்பின் வக்கீல் சாப், பிளேபேக், மேஸ்ட்ரோ, சாகுந்தலம், தந்த்ரா, பொட்டேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
என்னை ஏமாற்றிவிட்டார்
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில், எதற்காவது அழுது இருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறார். அதில், பல ஆண்டுகளுக்குப் பின் நான் ஒருவருக்காக மிகவும் அழுதேன்.

அதை காதல் தோல்வி என்று சொல்ல விருப்பம் இல்லை, ஆனால் ஒருவரை நான் மிகவும் நம்பினேன், அவர் என்னை ஏமாற்றிவிட்டார். காலையில் எழுந்தவுடன் அந்த நினைவுகளே என்னை வாட்டுகிறது.
நான் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் அந்த வலி மீண்டும் வந்து தாக்கும். இந்த பிரேக்-அப் வேதனையை கடந்த 3 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன் என்று பேசியிருக்கிறார் அனன்யா நாகல்லா.