4வது அறுவை சிகிச்சை செய்த தொகுப்பாளினி டிடி.. இதுதான் காரணம்..

Star Vijay Dhivyadharshini Tamil Actress
By Edward Sep 11, 2024 03:48 AM GMT
Report

திவ்யதர்ஷினி

விஜய் டிவியில் பல சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் திவ்யதர்ஷினி. இவர் தனுஷின் பவர்பாண்டி படத்திலும், ஜிவி பிரகாஷ் நடித்த சர்வம் தலைமையும் படத்திலும் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதேபோல், அதர்வா மணிகண்டன் நடித்த மத்தகம் என்ற வெப்தொடரிலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொகுப்பாளினி டிடிக்கு கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

4வது அறுவை சிகிச்சை செய்த தொகுப்பாளினி டிடி.. இதுதான் காரணம்.. | Anchor Dd Has Knee Replacement Surgery Post Viral

ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் டிடி, முன்னணி நடிகர்களின் திரைப்பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அறுவை சிகிச்சை

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு படுத்தபடுக்கையில் இருந்து சோகத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். 2 மாதங்களுக்கு முன் என் முழங்காலில் ஒரு பெரிய ஆப்ரேஷன் செய்தேன்.

மொத்த முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளேன். இது என் 4வது அறுவை சிகிச்சை. இதுவே இறுதி அறுவை சிகிச்சையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு நம்பிக்கையுடன் பிராத்தனை செய்கிறேன் என்று விதனையுடன் பதிவினை பகிர்ந்துள்ளார்.