அந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க மறுத்த தொகுப்பாளினி டிடி.. அது எந்த நடிகர் தெரியுமா
விஜய் தொலைக்காட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. தனது உடல்நிலை காரணமாக தற்போது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகி இருக்கிறார்.
பெரிய நடிகர்களின் படங்களின் ப்ரோமோஷன் விழாவை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். தொகுப்பாளினியாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த டிடி சில திரைப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.
ஆனால், ஒரு மிகப்பெரிய பட வாய்ப்பை தவறவிட்டுள்ளார். அதுவும் அஜித்துக்கு தங்கையாக வேதாளம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை டிடி தவறவிட்டுள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் வெளிப்படையாக டிடி பேசியுள்ளார். இதில், 2014ல் எனக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது தான் எனக்கு காலில் அறுவை சிகிச்சை முடிந்து 20 நாட்கள் ஆகியிருந்தது. என்னால் நடிக்க முடியாது என்கிற பயத்தில் நான் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டேன். ஆனால், கண்டிப்பாக அவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என இருந்தேன். அதன்பின் தான் எனக்கு தெரிந்தது, அது அஜித் சாரின் வேதாளம் படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்கவேண்டிய ரோல் என்று என அவர் கூறியுள்ளார்.