கட்டாயப்படுத்திய இசையமைப்பாளர்.. நடிகை ஆண்ட்ரியா கூறிய உண்மை

Andrea Jeremiah
By Kathick May 26, 2022 01:10 PM GMT
Report

தமிழ் சினிமாவில் சவாலான கதாபாத்திரத்தில் துணிச்சலாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்களில் ஒருவர் நடிகை ஆண்ட்ரியா. அவள், வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் தனித்து நிற்கும் அளவிற்கு நடித்திருப்பார்.

மேலும், தற்போது ஆண்ட்ரியாவின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படம் உருவாகி வருகிறது. நடிகையாக மட்டுமல்லாமல் தொடர்ந்து பல படங்களில் பாடல்களும் பாடி வருகிறார். அதிலும், சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா பாடலையும் ஆண்ட்ரியா பாடியிருந்தார். இப்படம் இந்தியளவில் மாபெரும் ரீச் ஆகியுள்ளது.

இந்நிலையில், இந்த பாடலை முதன் முதலில் நான் பாடமாட்டேன் என்று இசையமைப்பாளர் DSP-யிடம் கூறியுள்ளாராம் ஆண்ட்ரியா. ஆனால், அதன்பின் DSP உங்களால் முடியும் என்று கட்டாயப்படுத்தியன் காரணமாகவே நான் இந்த பாடலை பாடினேன்.