கும்பலிடம் சிக்கி...50, 60 இடத்துக்கு ஆடிஷனுக்கு வீடியோ அனுப்பினேன்!! 22 வயதான நடிகை ஓபன் டாக்..
அனீத் படா
பாலிவுட்டில் ரூ. 560 கோடிக்கும் மேல் வசூலித்து பிரம்பிக்க வைத்த சையாரா என்ற படத்தின் மூலம், ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த நடிகை தான் அனீத் படா. முதல் படத்திலேயே தன்னுடைய அசத்தலான நடிப்பால் தனக்கான ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று பிரபல நடிகையாக உருவெடுத்தார் நடிகை அனீத்.
2022ல் ரேவதி இயக்கத்தில் உருவான சலாம் வெங்கி படத்தில் நந்தினி ரோலில் நடித்தா அனீத் படா. பின் 2024ல் வெளியான பிக் கேர்ள் டோண்ட் ட்ரை என்ற வெப் தொடரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சினிமா மோகத்தில் பல இளம்பெண்களுக்கு ஏமாற்றம் நடப்பதைபோன்று தனக்கும் நேர்ந்ததாக கூறியிருக்கிறார்.
ஆடிஷனுக்கு வீடியோ
அதில் கொரானா காலத்தில் சினிமா வாய்ப்பு தேடி பல இணையதளங்களை தேடி அலைந்ததாகவும் அப்போது 50 முதல் 70 சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு தன்னுடைய வீடியோக்கள் மற்றும் சுய விவரங்களை அனுப்பினேன்.
வாய்ப்பு தேடிய போது வலைவிரிந்த மோசடி கும்பலிடம் சிக்கி, பல்வேறு போலி இணையதளங்களை அனுப்பி ஏமாந்ததாகவும் அனீத் படா தெரிவித்துள்ளார்.
ஆடிசன் என்ற பெயரில் நடக்கும் ஏமாற்று வேலைகள் குறித்து அறிந்தப்பின் தான் விழிப்புணர்வு அடைந்ததாகவும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.