விஜய் பக்கத்துல நானில்லை..கரூர்ல இறந்த 41 உயிர் திரும்ப வருமா!! நடிகர் இளவரசு..
நடிகர் விஜய், கரூரில் கடந்த மாதம் அரசியல் பரப்புரை செய்தபோது 41 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. விஜய்யின் செயலை பலரும் விமர்சித்து வந்த நிலையில், நீதிபதியும் விசாரணையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் மீது கடுமையான விமர்சனத்தை வைத்தார். இதனையடுத்து பத்திரிக்கையாளர்கள், பிரபலங்கள் என விஜய்யை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்கள்.
இளவரசு
இந்நிலையில் நடிகர் இளவரசு சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், விஜய்யுடன் இருக்கும் நபர் யார் தெரிகிறதா? என்ற ஒரு மீம் புகைப்படம் வந்ததை குறிப்பிட்டு, அது ஏசியா ஆனர் சினி சர்வீஸ் லைட்மேன் என்று கூறியுள்ளார்.
விஜய் பக்கத்தில் நிற்கும் நபர் நானில்லை, விஜய் இருப்பதாலே அங்கே அதைச்சுற்றி ஒரு வியாபாரம் ஓடுகிறது. கருத்து சுதந்திரம் முக்கியம். அதே நேரத்தில் கருத்து சொல்லாமல் இருப்பதும் சுதந்திரம்.
சமூகவலைத்தளங்களில் யார்யாரையோ தூண்டுவிட்டு காசு சம்பாதிக்கிறார்கள். எலக்ட்ரானிக் மீடியா ஒரு பெரிய வணிகமாகிவிட்டது என்று கூறியிருக்கிறார் நடிகர் இளவரசு.
ஒரு உசுருக்கூட
பகுத்தறிந்து, எது தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், யார் சொல்லியும் மாற வேண்டாம் என்றும் ஆட்டோ டிரைவர் சொன்னதை மேற்கோள் காட்டியும் பேசியிருக்கிறார்.
மேலும் நான் உங்களை தொந்தரவு பண்ணாமல் இருக்கிறது தான் என் சுய அரம் அதுதான் அரசியல். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருந்தாலே அதுவே போதும், அதுவே ஒரு சமூக அறம். கரூஇல் இறந்த 41 பேர் திரும்ப வரப்போகிறார்களா?.
இனிமேல் ஒரு உசுருக்கூட போகக்கூடாது என்று அனைவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும். இருவரை மட்டுமே குற்றம் சொல்வது சரியில்லை. அனைவர் மீதும் தவறு இருக்கிறது. இளைஞர்கள் எதை செய்யவேண்டும் என்ன செய்யவேண்டும் எப்படி பேச வேண்டும் என்ற பகுத்தறிந்து செய்தால் நிச்சயம் அவர்களுக்கு நன்மை கிடைப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு எந்தவொரு தீமையும் நடக்காது என்று கூறியிருக்கிறார்.