இப்போ உன் மூஞ்சியை யாராவது பார்ப்பாங்களா? நடிகை ராதிகா யாரை கலாய்க்கிறார்..
நடிகை ராதிகா
தென்னிந்திய சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை ராதிகா. எம் ஆர் ராதாவின் மகளாக பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகையில் இவரும் ஒருவர்.
தற்போது குணச்சித்த்ர ரோலில் நடித்து வரும் ராதிகா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்துள்ளார். தற்போது, எக்ஸ் தளப்பக்கத்தில் தனது தந்தை எம் ஆர் ராதா நடித்த ஒரு படத்தின் காட்சியின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மூஞ்சியை யாராவது பார்ப்பாங்களா
அதில், வாழ்ந்த வாழ்வென்ன. பங்களா வாசலில் எத்தனை கூர்கா. இந்த படமெடுக்கும் எல்லா தயாரிப்பாள்ர்களிடம்ம் பணத்தை வாங்கி கால்ஷீட் கொடுத்துட்டு கொடைக்கான சீசன்க்கு போய்டுவியே; வாய திறந்து என்ன சொல்வனு இந்த பேப்பர்க்காரங்க க்யூவில் நிற்பாங்களே.
உன் கண்ணழகு, கால் அழக வர்ணிக்க எத்தனை மைனர்கள். நீ கோணலாக கொடுக்கும் போஸை எல்லாம் உயர்ந்த போஸ்னு இந்த ஸ்டில் ஃபோட்டோகிராஃப்ர்கள் எடுத்துட்டே இருப்பாங்களே.
நீ நடிக்கிற படத்தைதான் பார்ப்பேனு இந்த புரியாத ஜனங்க இருந்தாங்களே. இப்போ உன் மூஞ்சியை யாராவது பார்ப்பாங்களா? என்ற டயலாக்கை பேசியிருக்கிறார் ராதா.
இதனை தவெக கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யை விமர்சிக்கத்தான் ராதிகா இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
#mrradha 🙏🙏 pic.twitter.com/woO8A3wEj3
— Radikaa Sarathkumar (@realradikaa) October 5, 2025