அந்தமாதிரி காட்சியில் நடிக்க வற்புறுத்திய இயக்குனர்! நடிகைக்கு பதில் டூப்பா?

citizen tamilactress anagha meendum saravanasubaiah
By Edward Dec 29, 2021 09:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தற்போதைய இளம் நடிகைகள் பிரபலமாக வேண்டும் என்று எந்த காட்சியில் வேண்டுமானாலும் நடிக்க தயாராக இருக்கிறார்கள். முன்னணி நடிகைகள் ஒதுக்கும் அந்தமாதிரி காட்சிகளுக்கு இளம் நடிகைகளை தேடுகிறார்கள் இயக்குனர்கள். அப்படி மலையாள நடிகையாக அறிமுகமாகி பின் நட்பே துணை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் அனகா.

இதையடுத்து டிக்கிலோனா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். சமீபத்தில் மகிழினி என்ற ஆல்பம் பாடலில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார். தற்போது நடிகர் அஜித்தின் சிட்டிசன் படத்தின் இயக்குனர் சரவண சுப்பையா இயக்கத்தில் உருவாகிய படம் ’மீண்டும்’.

கதிரவன், அனகா இணைந்து நடித்த இப்படத்தில் கதைக்காக கதாநாயகனுடன் நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதுமட்டும் வேண்டாம் என்னால் முடியாது என்று கூறி வந்துள்ளார் அனகா. ஒருகட்டத்தில் எவ்வளவு முடியுமா அப்படி நடித்து கொடுங்கள் என்று கூறியதற்கு நடித்தும் கொடுத்துள்ளார்.

ஆனால் இயக்குனர் நடிகை நடிக்க மறுத்த சில காட்சிகளுக்கு டூப் போட்டு அந்த சீனை எடுத்து வெளியிட்டுள்ளாராம். ஸ்டண்ட், பாடல் என டூப் இருந்த காலகட்டத்தில் அந்தமாதிரி காட்சிகளுக்கு டூப் போட்டுள்ளீர்களே என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.