17 வயதில் ஹீரோயின் அவதாராம்.. போதைக்கு அடிமையாக மாறிய ரோலில் அனிகா...புகைப்படம்
தமிழில் என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் அனிகா சுரேந்திரன். அஜித்தின் மகளாக என்னை அறிந்தால், விசுவாசம் படத்தில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று அஜித் ரீல் மகளா இப்படி என்று வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதன்பின் குயின், மாமனிதன், வாசுவின் கர்ப்பிணிகள், போன்ற படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்தார்.
குட்டி நயன்தாரா என்று கூறும் அளவிற்கு சேலையில் அவரின் லுக் அப்படியே லேடி சூப்பர்ஸ்டாரை போல் தோற்றமளித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் லவ்லி யுவர்ஸ் வேதா என்ற படத்தில் 17 வயதிலேயே கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.
ஹீரோயின் ஆனதும் முதல் படத்தின் பூஜையிலேயே படுமோசமான ஆடையில் வந்து வாய்ப்பிளக்க வைத்தார். அதனை தொடர்ந்து இளம் நடிகை போல் தன்னை மாற்றிக்கொண்டு போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டும் வருகிறார்.
சமீபத்தில் நடிகர் நாகர்ஜுனா நடிப்பில் உருவாகிய கோஸ்ட் படத்தில் அனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மதுவுக்கு அடிமையான சிறுமியாக இப்படத்தில் நடித்திருக்கும் அனிகா அவருடன் நடித்த தோழிகளுடன் எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் சமீபத்தில் எடுத்த க்யூட் போட்டோஷூட் ரியாக்ஷன் புகைப்படமும் வெளியாகியுள்ளது.


