22 வயதை எட்டிய அனிகாவுக்கு நச்சுன்னு ஒரு முத்தம்!! பர்த்டே போட்டோஸ்..
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய அனிகா, பாஸ்கர் தி ராஸ்கல், நயணம் உள்ளிட்ட படங்களில் சிறுமி ரோலில் நடித்தார்.
அனிகா சுரேந்திரன்
தமிழில் அஜித், திரிஷாவின் மகளாக என்னை அறிந்தால் படத்திலும், அஜித் - நயந்தாராவின் மகளாக விஸ்வாசம் படத்திலும் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்று பிரபலமானார். அதன்பின் 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

அதன்மூலம் தி கோஸ்ட், புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் 17 வயதிலேயே ஹீரோயினாக கமிட்டாகி நடித்தார். கடந்த 2025ல் தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
தற்போது வாசுவின் கர்பிணிகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அனிகா, கடந்த நவம்பர் 27 ஆம் தேதி தன்னுடைய 22வது பிறந்தநாளை தொடங்கினார். அவரின் பிறந்தநாளுக்கு அம்மா மற்றும் தோழிகளுடன் எடுத்த பர்த்டே புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.



