18 வயசானதும் இப்படியா!! கிளாமரில் குத்தாட்டம் போட்ட அஜித் ரீல் மகள் அனிகா
என்னை அறிந்தால் படத்தின் மூலம் அஜித் - திரிஷாவுக்கு மகளாக தமிழில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் நடிகை அனிகா சுரேந்திரன். இப்படத்தின் மூலம் மலையாளம் மற்றும் தமிழில் அடுத்தடுத்த படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து கலக்கினார்.
அதன்பின் அஜித் - நயன் தாரா நடிப்பில் சூப்பர் ஹிட் கொடுத்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து சிறப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். அதன்பின் 14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்று புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.
போட்டோஷூட் போகபோக கிளாமர் ரூட்டுக்கு போக ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்தார். குட்டி நயன் தாரா என்று கூறும் அளவிற்கு லேடி சூப்பர் ஸ்டாரை மிஞ்சும் அழகில் போட்டோஷூட் எடுத்து வந்தார்.
சமீபத்தில் 18 வயதாகும் முன்பே தெலுங்கு, மலையாள மொழிகளில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகி இருக்கிறார். 18 வயதான அனிகா தற்போது வாய்பிளக்கும் அழகில் மாறி போட்டோஷூட் எடுத்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
ஆனால் அடக்கவுடக்கமான பெண் போல் நடிப்பார் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்கள் தற்போது அவர் வெளியிட்ட வீடியோவால் ஷாக்காகி வருகிறார்கள். வேதா என்ற படத்தில் நடித்துள்ள அனிகா, குட்டையான ஆடையணிந்து குத்தாட்டம் போட்டுள்ளார். 18 வயதில் நடிகையானது இப்படியா என்று ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.