கேரியருக்கே ஆப்பு வைத்த அனிருத்? அக்காவுக்காக இப்படி தனுஷை பழி வாங்கலாமா?

Dhanush Anirudh Ravichander Thiruchitrambalam
By Edward Jun 26, 2022 06:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ் பல நட்சத்திரங்களை அறிமுகப்படுத்தி இருப்பார். அப்படி 3 படத்தின் மூலம் இசையில் அனிருத் ரவிச்சந்திரனை அறிமுகப்படுத்தினார். அதற்கு காரணம் தனுஷின் அப்போதைய மனைவியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படமாக 3 இருந்ததால் அவரது உறவினர் அனிருத்தை அறிமுகப்படுத்தினார்.

அனிருத் - தனுஷ் பிரச்சனை

இப்படத்தின் வெற்றியையடுத்து பல படங்களில் ஒன்றாக வேலை பார்த்து வந்த அனிருத் - தனுஷ் பல சாதனைகளையும் பாடல்களில் கொடுத்து வந்தனர். பல ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் - அனிருத் கூட்டணி திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் இணைந்தனர்.

அப்படத்தின் சிங்கிள் பாடலான தாய் கிழவி பாடல் வெளியானது. இருவரின் கூட்டணி என்றாலே மிகப்பெரியளவில் வரவேற்பு பெற்று வேறவெவலில் இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆமால் பாடல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது.

தனுஷ், அனிருத் பாடல் வந்தாலே பட்டித்தொட்டியெங்கும் ஒலிக்கும் அளவிற்கு ஆங்காங்கு பாடல்கள் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் பெரியளவில் யாரும் கொண்டாடவில்லை என்பது தான் உண்மை. பாடல் ரிலீஸ் வீடியோவில் அனிருத் பாடல் பாடும் காட்சி கண்டிப்பாக இடம்பெறும்.

ஆனால் தாய்க்கிழவி பாடலில் முழுக்க முழுக்க தனுஷ் மட்டுமே நடனம் ஆடி இருந்தார். அந்த பாடலில் ஒரு இடத்தில் கூட அனிருத் வரவில்லை.

விவாகரத்து பிரச்சனையும் காரணமா

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தனுஷ்-அனிருத் பிரச்சனை இன்னும் தீரவில்லையா என்றும் அனிருத்-க்கு அக்கா முறையில் வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தனுஷ் விவாகரத்து செய்ததால் தான் அனிருத் தனுஷுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வருகிறாரா? என்ற கேள்விகள் எழுந்து வருகிறது.

தனுஷ் மீது உள்ள வன்மத்தால் தான் இவ்வாறு அனிருத் மொக்கையான பாட்டை போட்டு இருக்கிறார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டும் வருகிறது.