பண்ணதெல்லாம் பண்ணிட்டு கல்யாணத்துக்கு ஸ்பெல்லிங் தெரியாதாம்? வைரலாகும் வீடியோ.

Andrea Jeremiah Anirudh Ravichander Gossip Today
By Edward Jul 02, 2022 06:34 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் கடந்த ஆண்டுகளில் அதிக படங்களிலுக்கு இசையமைத்தவர் என்ற பெயரை எடுத்தவர் இசையமைப்பாளர் அனிருத். 3 படத்தின் மூலம் இசைப்பயணத்தை ஆரம்பித்த அனிருத் சமீபத்தில் விக்ரம் வெற்றிக்கு முக்கிய புள்ளியாக அமைந்தார்.

இந்த ஆண்டு வெளியான விக்ரம், காத்துவாக்குல ரெண்டுகாதல், டான், பீஸ்ட் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருந்தார். ஆரம்பத்தில் இசையிலும் பாடல் பாடுவதிலும் கவனம் செலுத்தி வந்த அனிருத் காதல் மற்றும் நடிகைகளுடன் நெருக்கம் என சில கிசுகிசுக்களிலும் சிக்கினார்.

அப்படி ஆரம்பகால அனிருத்தின் சினிமா வாழ்க்கையில் முதல் கிசுகிசுவாக அனிருத் ஆண்ட்ரியா சுச்சி லீக்ஸ் புகைப்படம் தான். இருவரும் காதலித்து வந்ததாகவும் தனிமையில் இருந்த புகைப்படங்கள் லீக்காகியும் இருந்தது.

இதுகுறித்து அனிருத் காப்பி வித் ரோஸ் நிகழ்ச்சியில் ஆண்டிரியாவுடன் காதலில் இருந்ததாகவும் வயது ஒரு பிரச்சனையாக இருந்ததாகவும் கூறியிருந்தார். இப்படி கூறிய அனிருத் ஒரு பேட்டியில் கல்யாணத்துக்கு ஸ்பெல்லிங் கூட எனக்கு தெரியாதுங்க என்று டிடி-யிடம் கூறியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தற்போது அனிருத்திற்கு திருமணம் செய்ய முடிவெடுத்ததாகவும் அவர் திருமணம் செய்யப்போவது இவரை தான் என்று சில நடிகை மற்றும் பாடகிகளின் பெயர் அடிப்பட்டு வருவதாகவும் செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.