ரஜினி, ஷாருக்கானுக்கு ஓகே விஜய்-கு நோ!! நம்ப வைத்து ஏமாற்றிய அனிரூத்!! பத்திரிக்கையாளர் கூறிய உண்மை இதுதான்..

Vijay Anirudh Ravichander Lokesh Kanagaraj Gossip Today Leo
By Edward Sep 28, 2023 08:20 AM GMT
Report

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. இப்படத்திற்காக பல எதிர்ப்பார்ப்புகள் நிறைந்த சம்பவங்கள் நடந்து வந்த நிலையில், லியோ ஆடியோ லான்ச் சென்ன நேரு ஸ்டேடியத்தில் வரும் 30 ஆம் தேதி நடைபெறவிருந்தது.

இதற்காக டிக்கெட்டுகள் ரசிகள் வாங்கி வந்த நிலையில் நேற்று இரவு படக்குழுவினர் ஆடியோ லான்ச் இல்லை என்றும் அதற்கான காரணம் அரசியல் பின்புலம் இல்லை என்றும் கூறியிருந்தனர்.

இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் மற்றும் பிஸ்மி கூறுகையில், அனிரூத் தான் இசை வெளியீட்டு விழா நடக்காத்தற்கு காரணம் என்று கூறியுள்ளனர்.

அதாவது அனிருத் சில வேலைகள் இருப்பதால் அவர் வரமுடியாது என்று கூறியிருக்கிறார்.

லைவ் பிரோகிராம் செய்ய முடியாது என்பதால் ஆடியோ லான்ச்சின் நாயகன் அனிரூத் இல்லாமல் எப்படி நிகழ்ச்சி என்று நினைத்து தான் ஆடியோ நிகழ்ச்சியை கேன்சல் செய்துள்ளார்களாம்.

ரஜினி, ஷாருக்கான் படத்திற்கு மட்டும் ஓகே சொல்லி கிளம்பும் அனிருத் ஏன் விஜய் படத்திற்கு ஓகே சொல்லவில்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்தும் வருகிறார்கள்.