34 வயதாகியும் ஏன் திருமணமாகல!! அனிருத் அம்மா என்ன இப்படி சொல்லிட்டாங்க...

Anirudh Ravichander Marriage Tamil Singers
By Edward Mar 01, 2025 05:30 AM GMT
Report

அனிருத் ரவிச்சந்திரன்

நடிகர் தனுஷ், ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான 3 என்ற படத்தின் மூலம் இசையமையமைப்பாளராக அறிமுகமாகி முதல் படத்திலேயே உலகளவில் பிரபலமாகியவர் அனிருத் ரவிச்சந்திரன். இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இசையமைத்து பிஸியான அனிருத், ஜெயிலர், லியோ, ஜவான், இந்தியன்2, தேவரா, வேட்டையன், விடாமுயற்சி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார்.

தற்போது கூலி, மதராஸி, ஜனநாயகன், தி பேரடைஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அனிருத் சில நடிகைகள் மற்றும் பாடகிகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி வந்தார். அதிலும் சில நடிகைகளுடன் விரைவில் திருமணம் பாடகியுடன் ரகசிய டேட்டிங் என்றெல்லாம் செய்திகள் உலா வந்தது.

34 வயதாகியும் ஏன் திருமணமாகல!! அனிருத் அம்மா என்ன இப்படி சொல்லிட்டாங்க... | Anirudh S Mother Speaks About His Marriage

அனிருத் அம்மா பேட்டி

இந்நிலையில் அனிருத், 34 வயதாகியும் இன்னும் ஏன் திருமணம் செய்யவில்லை என்ற காரணத்தை அவரது அம்மா பதிலளித்துள்ளார். என் மகனின் திருமணம் கடவுள் கிருபையால் எவ்வளவு சீக்கிரம் நல்லபடியாக நடிக்குமோ அவ்வளவு நல்லது. அவருடைய மனதை புரிந்துக்கொள்ளும் வகையில் அவருடைய டைமிங் எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் பெண் கிடைக்க வேண்டும். ஏனென்றால் பலருக்கும் தெரிந்திருக்கும் கிரியேட்டிவ் ஃபீட்டில் இருக்கிறவர்களுக்கு அவர்களுடைய மனது ரொம்ப ரொம்ப முக்கியம்.

34 வயதாகியும் ஏன் திருமணமாகல!! அனிருத் அம்மா என்ன இப்படி சொல்லிட்டாங்க... | Anirudh S Mother Speaks About His Marriage

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நான் இன்று அவனை ஒரு குழந்தை மாதிரித்தான் பொத்தி பொத்தி வளர்க்கிறேன். அவன் மனதை கஷ்ப்படுத்தும் விஷயத்தை சொல்லமாட்டேன். அனிருத் இந்த விஷயத்தில் ஆசிர்வதிக்கப்பட்ட பையன் என்று கூட சொல்லலாம். நான் தான் அவனுடைய ஸ்டுடியோவை கவனிக்கிறேன். அவனுடைய ஷெட்யூலை பார்த்துக் கொள்கிறேன். ஏன்னா அவருடைய ஒரு லைனை நாம் கிராஸ் பண்ணக்கூடாது என்று நினைக்கிறேன்.

நான் என்னதான் அம்மாவாக இருந்தாலும் கூட ஒரு வேலையை செய்கிறோம் என்கிற போது அந்த லைன்ஸ் கிராஸ் பண்ணாமல் பண்ணனும். அது ரொம்பவே முக்கியம். அதை நான் இப்போது கத்துக்கிட்டேன். அதேமாதிரி அவருக்கு ஒரு பொண்ணு கிடைக்கணும் என்று அனிருத் தயார் வெளிப்படையாக பேசியுள்ளார்.