அனிருத் கேட்ட சம்பளம்!! கொடுத்தால் உபசரிப்பு இல்லை என்றால் அவமதிப்பாம்..
இசையமைப்பாளர் அனிருத்
தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, இந்தி சினிமா படங்களுக்கு இசையமைத்து தன் மார்க்கெட்டை உயர்த்தி வருகிறார் இசையமைப்பாளர் அனிருத்.
சமீபகாலமாக வெளியாகும் முன்னணி நடிகர்கள் படங்களுக்கு அனிரூத் தான் அதிகம் இசையமைத்து வருகிறார்.
அந்தவகையில், அவரின் இசையில் வேட்டையன் விடாமுயற்சி, தேவரா, இந்தியன் 3, கூலி, தளபதி69ஜெர்சி உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
10 கோடி
இந்நிலையில் ஒரு படத்திற்கு இசையமைக்க அனிருத், ஏ ஆர் ரகுமானின் சம்பளம் 8 கோடியைவிட அதிகமாக வாங்குவதாக கூறப்படுகிறது. அப்படி அனிருத் ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளமாக பெறுகிறாராம்.
மேலும் தன்னுடைய இசையில் மற்ற பாடகர்களுக்கு வாய்ப்பு தராமல் அவரே பாடல்களை பாடிக்கொள்வதாக விமர்சனங்களும் எழுகிறது. அதிலும் மற்ற இசையை காப்பி செய்து அதை கலவை செய்து இசையமைக்கிறார் என்ற விமர்சனமும் அனிருத் மீது இருப்பது குறிப்பிடத்தக்கது.