அவருடன் ஜோடியா? நயன்தாரா இடத்தை பிடித்த அஞ்சலி!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை என்ற இடத்தினை பெற பல ஆண்டுகளாக சிறு பட்ஜெட் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வருபவர் நடிகை அஞ்சலி. பல படங்களில் நடித்து பெரியளவில் மார்க்கெட் இல்லாமல் இருந்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, கன்ண்டம் என மொழி படங்களில் நடித்து வரும் அஞ்சலி தற்போது காமெடி நடிகர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். மண்டேலா, கோலமாவு கோகிலா போன்ற படத்தில் நயன் தாராவுடன் ஹீரோவாக நடித்துள்ளார்.
அப்படத்திற்கு பின் தற்போது மீண்டும் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடிப்பதை கேள்விப்பட்ட ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.
கடைசியில் இப்படியொரு நிலையா என்ற கேலியை கேள்விப்பட்ட அஞ்சலி நயன்தாராவும் அந்த நடிகருடன் நடித்தவர் தான். நான் நடிப்பதில் என்ன தவறு. எனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை நான் தேர்ந்தெடுக்கிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.