ஜெய்யுடன் நெருக்கமான காதலால் வாழ்க்கை இழந்தேனா!! உண்மையை உடைத்த நடிகை அஞ்சலி..

Jai Anjali Gossip Today
By Edward Dec 08, 2022 12:05 PM GMT
Report

தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தில் ராம் இயக்கத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை அஞ்சலி. 2007ல் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றதோடு, அதில் நடித்த ஜீவா, அஞ்சலிக்கு மிகப்பெரிய கேரியராக அமைந்தது.

ஜெய்யுடன் நெருக்கமான காதலால் வாழ்க்கை இழந்தேனா!! உண்மையை உடைத்த நடிகை அஞ்சலி.. | Anjali Open Up Love With Jai Relationship

இப்படத்தினை தொடர்ந்து அஞ்சலி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார். இடையில் எங்கேயும் எப்போதும், பலூன் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போது இருவருக்கும் ரகசிய காதல் இருப்பதாகவும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது.

இதனால் தான் அஞ்சலி வாய்ப்பில்லாமல் வாழ்க்கை பாழானதாகவும் செய்திகள் வெளியானது. இதுகுறித்து FALL படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிக்கொடுத்த போது இந்த கேள்விக்கு பதிலளித்துள்ளார். நான் காதலிக்கிறேன் என்று யாரிடமும் கூறியதில்லை.

சினிமாவில் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். அதனால் பலர் அப்படித்தான் எழுதுவார்கள். அதை பற்றி நான் எதையும் பேசியதும் இல்லை பேச விருப்பமும் இல்லை. அதை நான் செய்தால் தானே அதை பற்றி நான் கவலைப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். 

Gallery