பொது மேடையில் நடிகர் அத்துமீறி செய்த செயல்... சினிமாவை விட்டு விலகும் நடிகை
Actress
By Yathrika
போஜ்புரி நடிகை
சினிமாவில் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு அதிகம் உள்ளது.
ஒரு மொழியில் தான் இந்த பிரச்சனை இல்லை எந்த மொழி சினிமா எடுத்தாலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் போஜ்புரியில் Saiya Seva Kare வெளியான பாடலை புரொமோட் செய்ய பவன் சிங் மற்றும் அஞ்சலி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அப்போது அஞ்சலி மேடையில் பேசிக்கொண்டிருந்த போது பவன் நடிகையிடம் தவறாக நடந்துகொண்டிருக்கிறார். அந்த வீடியோ வெளியாக, நடிகருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்த நடிகை எனது ஆடையில் ஏதோ இருந்தது என தான் நினைத்தேன், வீடியோ பார்க்கும் போது தான் தெரிகிறது. நான் போஜ்புரி சினிமாவை விட்டே விலகுகிறேன் என கூறியுள்ளார்.