நான் 19 வயதில் இருக்கும் போது படுக்கைக்கு அழைத்தார்!! சுஷாந்த் சிங் காதலி ஓபன் டாக்
பவித்ர ரிஷ்டா என்ற ஹிந்தி தொடரில் சுஷாந்த் சிங் உடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் தான் அங்கிதா லோகாண்டே. அந்த சீரியலில் இருவரும் சேர்ந்து நடிக்கும் போது காதலித்து வந்தனர், ஆனால் சில காரணத்தால் பிரிந்துவிட்டனர்.
அதன் பின் அங்கிதா லோகாண்டே விக்கி ஜெயின் என்பவரை கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அங்கிதா லோகாண்டே, தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி பேசியுள்ளார். அதில் அவர், நான் டிவி சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தேன். அப்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆனேன். அப்போது அவர்கள் என்னை அழைத்து.
நீங்கள் தான் இப்படத்தில் கதாநாயகி. அதற்கு நீங்கள் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண வேண்டும் என கூறினார். இதை கேட்டவுடன் அதிர்ச்சியாகிவிட்டேன். அந்த சமயத்தில் எனக்கு வயது வெறும் 19 தான். அவர்கள் அப்படி சொன்னவுடன் ஒரு மாதிரியாக இருந்தது. நான் அவர்களை திட்டிவிட்டு அங்கு இருந்து வந்துவிட்டேன் என்று அங்கிதா லோகாண்டே தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், மறைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் காதலியான அங்கிதா லோகாண்டே, தயாரிப்பாளர்கள் ஒருவர் படுக்கைக்கு அழைத்தார் என்று பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். ஆனால் யார் படுக்கைக்கு அழைத்தார் என்பதை பற்றி சொல்லவில்லை.
யார் அப்படி அழைத்தார் என்பதை தைரியமாக சொல்லவேண்டும். அதை சொல்வதில் என்ன தயக்கம். எதற்கு மூடி மறைச்சி பேசுறீங்க என்று பயில்வான் ரங்கநாதன் பேட்டியில் கூறியுள்ளார்.