இது வெட்கக்கேடானது..தன் மார்ஃபிங் புகைப்படத்தால் அதிர்ந்த ஜெயிலர் 2 பட நடிகை...
அன்னா ரேஷ்மா ராஜன்
மலையாள சினிமாவில் அங்கமேலி டைரீல் மூலம் அறிமுகமாகி வெளிபடிந்தே புஸ்தகம், அய்யப்பனும் கோஷியும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அன்னா ரேஷ்மா ராஜன். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அவரது புகைப்படங்கள் ஆபாசமாக எடிட் செய்யப்பட்டு சோசியல் மீடியாக்களில் பரப்புவதாக கூறி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவினை பகிர்ந்து, அதில் இடம்பெற்ற மார்பிங் புகைப்படத்தை பகிர்ந்த சம்பந்தப்பட்ட இன்ஸ்டா கணக்கையும் பதிவிட்டுள்ளார்.
வெட்கக்கேடானது
மேலும், இப்புகைப்படம் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தீயநோக்கத்துடன் எடிட் செய்யப்பட்டு, ஆபாசமாக, அவதூறாக பதிவிடப்பட்டுள்ளது. இது வெட்கக்கேடானது. ஏற்றுக்கொள்ள முடியாதது.

என்னுடைய தனியுரிமை, கண்ணியத்தின் மீதான கடுமையான மீறலாகும். இக்கணக்கை நான் இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வமாக புகாரளிக்கிறேன். சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் காவல் துறையிலும் புகாளித்துள்ளேன்.
இச்செயலை உருவாக்கிய, பகிர்ந்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நீதி கிடைக்கும் வரை நான் போராடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.