சில்க் ஸ்மிதாவை பார்த்து வாய் பிளந்தேன்..பிரபல நடிகை ஓபன் டாக்..

Silk Smitha Kushboo Tamil Actress
By Jai Jul 18, 2026 07:30 AM GMT
Report

சில்க் ஸ்மிதா

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் பலரது கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. அவர் இறந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் அவருடன் இருந்த அனுபவங்கள் குறித்து பிரபலங்கள் பேட்டிகளில் பகிர்ந்து வருவார்கள்.

சில்க் ஸ்மிதாவை பார்த்து வாய் பிளந்தேன்..பிரபல நடிகை ஓபன் டாக்.. | I Could Only Stare At Silk Smitha Khushbu Emotion

இந்நிலையில் நடிகை குஷ்பூ, சில்க் ஸ்மிதா குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், லுக்கிலும், உடலிலும் ரொம்ப கம்ஃபர்டபுளாக இருக்கும் நடிகை என்றால் அது சில்க் ஸ்மிதா தான். நான் அவரிடம் நிறைய ஈர்க்கப்பட்டு இருக்கிறேன்.

நானும், அர்ஜுனும் நடித்த ஒரு படத்தில் அவரும் ஒரு ரோல் நடித்தார். அந்த படப்பிடிப்பில் எல்லோரும் மேடம் வரப்போறாங்க மேடம் வரப்போறாங்கன்னு சொல்வார்கள். அப்போது யார் அந்த மேடம் என்று ஆச்சரியத்துடன் பார்க்கும்போது அவர் வருவார்.

சில்க் ஸ்மிதாவை பார்த்து வாய் பிளந்தேன்..பிரபல நடிகை ஓபன் டாக்.. | I Could Only Stare At Silk Smitha Khushbu Emotion

அப்போது அவரை வாய் பிளந்து பார்த்திக்கிறேன். நான் அப்படி பார்த்த ஒரே ஸ்டார் அவர் மட்டும்தான் என்று குஷ்பூ நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.