என்னை ஏன்டா குடிக்கவிடல!! நண்பரிடம் கோபத்தில் சண்டை போட்ட இளையராஜா...
இந்திய சினிமாவின் இசை அடையாளமாக திகழ்ந்து இசைஞானி என்று போற்றப்பட்டு வரும் இளையராஜா கிட்டத்தட்ட 50 வருடங்களில் 1500 படத்திற்கும் மேல் இசையமைத்து மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். இந்தியாவில் முதன்முறையாக் சிம்பொனி இசையை அரங்கேற்றியவர் என்ற பெருமையை இளையராஜா சமீபத்தில் பெற்றார்.
சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு அரசு சார்பில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடந்தது. முதலமைச்சர், துணை முதலமைச்சர், கமல் ஹாசன் உள்ளிட்ட பலரும் இளையராஜா பற்றி பேசியது சிறப்பாக இருந்தாலும் நடிகர் ரஜினிகாந்த் பேசியதுதான் ஹைலைட்டாக இருந்தது.
ரஜினிகாந்த் பேசியது
இளம் வயதில் தாங்கள் செய்த செயல் குறித்து ராஜா பேசியபோது குறுக்கிட்ட ரஜினிகாந்த், ஜானி பட ஷூட்டிங்கின் போது நான், மகேந்திரன், ராஜா ஆகிய மூன்று பேரும் பீர் குடித்தோம்.
அப்போது இளையராஜா அரை பாட்டில் பீர் குடித்துவிட்டு ஆடிய ஆட்டம் இருக்கே, நடிகைகளை பற்றி கிசுகிசுக்களக நள்ளிரவு 3 மணிவரை பேசிக்கொண்டிருந்தார். அண்ணன் அப்போலாம் செம லவ், அதனால் தான் இப்படி பாடல்கள் வந்தன என்று கலகலப்பாக பேசி அரங்கில் இருந்தவர்களை குதூகலப்படுத்தினார் ரஜினிகாந்த்.
இந்நிலையில், கதாசிரியரும் இளையராஜாவின் நெருங்கிய நண்பருமான செல்வராஜ் அளித்த பேட்டியொன்றில் இசைஞானி குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
என்னை ஏன்டா குடிக்கவிடல
அதில், பஞ்சு அருணாச்சலத்திடம் இளையராஜாவுக்காக வாய்ப்பு கேட்டு ஒத்துக்கொள்ள வைத்துவிட்டேன். ராஜாவும் வந்தார், அவரை பஞ்சு பார்த்தப்பின், என்ன இவர் இவ்வளவு இள வயசா இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டார்.
அதேசமயம் பாடலி ராஜா பாடியப்பின் பஞ்சு அருணாச்சலம் அசாந்துப்போய்விட்டார். நான் சொல்லிவிடுகிறேன் என்று கூறிவிட்டு, மது அருந்த ஆரம்பித்தார்.
அப்போது ராஜாவிடம் நீங்கள் மது குடிக்கிறீர்களா என்று பஞ்சு கேட்டார். ஆனால் எனக்கு ராஜாவை பற்றி நன்றாக தெரியும், அவர் மது குடித்துவிட்டு ஏதாவது பேசிவிட்டால் வாய்ப்பு போய்விடுமே என்று பயந்து அவருக்கு இந்த பழக்கம் இல்லை என்று நான் கூறினேன்.
அங்கிருந்து நாங்கள் கிளம்பியதும் இளையராஜா என்னிடம், அவர்தான் என்னிடம் குடிக்கிறியான்னு கேட்டாரு, நீ ஏன் தடுத்த, என்னை ஏன்டா குடிக்கவிடல, நீ மட்டும் குடித்தாயே என சண்டைப்போட்டார். பின் எப்படியோ அவரை சமாதானம் செய்துவிட்டேன் என்று செல்வராஜ் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.