காந்தாரா படம் பார்க்க அசைவம் சாப்பிட்டு வரக்கூடாதா!! விளக்கமளித்த நடிகர் ரிஷப் ஷெட்டி..
காந்தாரா சேப்டர் 1
கன்னட திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. அப்படி நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கிய காந்தாரா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தரா சேப்டர் 1 வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை அதிகரித்திருந்தது.
இந்நிலையில், படத்தை பார்க்க வருபவர்கள் அசைவம் அருந்திவிட்டு வரக்கூடாது என்று பல கண்டீசன்கள் போடப்பட்ட போஸ்டர் இணையத்தில் வைரலானது. இதனை படக்குழுவினர் தான் வெளியிட்டுள்ளார்கள் என்று விமர்சிக்கப்பட்டு வந்தது.
ரிஷப் ஷெட்டி
இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியபோது இந்த சர்ச்சைக் குறித்த கேள்வி எழுந்தது. அதற்கு நடிகர் ரிஷப் ஷெட்டி, உணவு என்பது அவரவர் உரிமை, விருப்பம் சார்ந்தது.
அந்த போலி போஸ்டர் வெளியானபோது முதலில் எங்களுக்கும் அதிர்ச்சியாகத்தன் இருந்தது. ஆனால் ஒரு போலியான விஷயத்திற்கு ஏன் விளக்கமளிக்க வேண்டும் என்றே நாங்கள் எதுவும் சொல்லவில்லை.
யாரோ கவனம் ஈர்க்க, வைரலாக காந்தாராவை பயன்படுத்திக் கொண்டார்கள். இதற்கும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று ரிஷப் ஷெட்டி தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.