மலைடா அண்ணாமலை!! சரமாறியாக கேள்வி கேட்ட அண்ணாமலை..

bjp annamalai
By Edward Jan 03, 2022 04:50 PM GMT
Report

தமிழக மாநில பாஜக தலைவராக இருந்து பணியாற்றி வருபவர் அண்ணாமலை. சமீபகாலமாக ஊடங்கங்களை எதிர்த்து பேசி வருவதாக பலர் கூறி வந்தனர். தற்போது குறித்த தொலைக்காட்சி சேனலின் பெயரை கூறி திமுக மற்றும் அதிமுக கட்சிகளை கூட்டி விவாத நிகழ்ச்சியை நடத்துங்கள் நான் அதில் கலந்து கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.

இதனால் செய்தியாளர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நான் கூறியதை கூறுவேன். எப்போது தமிழ்நாட்டில் உள்ள சில மீடியாக்கள் நேர்மையாக நாணயமாக மாறுகிறதோ அன்று தான் என்னுடைய பேச்சும் மாறும் என்றும் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் தமிழக ஊடகங்களை கொண்டு வருவோம் என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

மேலும் நான் இப்போது பேசியதை எடிட் செய்து போடுங்கள் இல்லை என்றால் குப்பையில் போடுங்கள் என்று கூறியுள்ளார். இதனை பலர் கிண்டல் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.