இந்தியில் தமன்னாவிடம் உடலை வர்ணித்து பேட்டி!! மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்..

Tamannaah Gossip Today Actors Actress
By Jai Jul 23, 2026 01:15 PM GMT
Report

தமன்னா - அன்னு கபூர்

நடிகை தமன்னா சமீபத்தில் நடித்த ’ஆஜ் கி ராத்’ பாடல் நாடு முழுவதும் மிகப்பெரியளவில் ஹிட்டானது. அப்பாடலில் தமன்னாவின் நடனமும் கிளாமர் தோற்றமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. பலரும் சோசியல் மீடியாகளில் அப்பாடலை கொண்டாடிய நிலையில் நடிகர் அன்னு கபூரும் அப்படம் குறித்து பேசியிருந்தார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில், அந்த பாடலை பார்த்தப்பின் தமன்னாவின் ரசிகனாகவே மாறிவிட்டேன். அவரது அழகையும் உடலமைப்பும் பார்த்து வியந்துபோனேன் என்று கூறியிருந்தார். அதோடுமட்டுமல்லாமல் தமன்னாவை பால் போன்ற மேனி கொண்டவர் என இந்தியில் சரிச்சைக்குரியபடி பேசினார்.

இந்தியில் தமன்னாவிடம் உடலை வர்ணித்து பேட்டி!! மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்.. | Annu Kapoor Apologises Tamannaah Milky Beauty

மேலும் இந்த பாடலை பார்த்த இளைஞர்களுக்கு தூக்கம் வரவில்லை என்று தமன்னா முன்பு கூறிய கருத்து பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அன்னு கபூர், அவரது பால் போன்ற மேனியும் முகமும் இளைஞர்கள் நிம்மதியாக தூங்க உதவுகிறது.

அது ஒரு நல்ல விஷயம், அவருடைய அனைத்து ஆசைகளையும் கடவுள் நிறைவேற்றட்டும், என்னுடைய ஆசிகள் எப்போது அவருக்கு உண்டு என்று கூறியிருந்தார். இது பலருக்கும் பிடிக்காமல் போக, உங்களுக்கு மகள்களும் பேத்திகளும் இருக்கிறார்கள். ஒரு நடிகையை பற்றி இப்படியா பேசுவீர்கள் என்று விளாசினர்.

இந்தியில் தமன்னாவிடம் உடலை வர்ணித்து பேட்டி!! மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்.. | Annu Kapoor Apologises Tamannaah Milky Beauty

மன்னிப்பு

இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அன்னு கபூர், 300 ஆண்டுகள் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் வாழ்ந்ததன் தாக்கம் இன்னும் நம்மிடம் இருக்கிறது. ஆங்கிலத்தில் ஒருவரை பாராட்டினால் அது நாகரிகமாக தெரிகிறது. அதே கருத்தை இந்தியில் சொன்னால் மட்டும் தவறாக பார்க்கிறார்கள்.

அரசியல் ரீதியாக நமக்கு 1947ல் சுதந்திரம் கிடைத்தது, ஆனால் மனரீதியாக இன்னும் ஆங்கிலேயர்களின் தாக்கத்திலிருந்து முழுமையாக வெளிவரவில்லை.

தமன்னாவை ஆங்கிலத்தில் மில்க் ப்யூட்டி அல்லது மில்கி பாடி என்று சொன்னால் யாரும் கேள்வி கேட்பதில்லை, ஆனால் அதையே இந்தியில் தூதியா பதன் என்று சொன்னால் தவறாக எடுத்துக் கொள்கிறார்கள்.

நான் பேசிய வார்த்தைகள் யாருடைய மனதை புண்படுத்தி இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தமன்னா எப்போதும் மகிழ்ச்சியாக, நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.