ஏஆர் ரஹ்மான் - சாய்ரா விவாகரத்து!! முக்கிய காரணமே இதுதானாம்!! பிரபல சொன்ன தகவல்..
விவாகரத்து
ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் அவரது மனைவி சாயிரா பானு இருவரும் கடந்த 29 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்து உள்ளனர். 1995ல் அவர்கள் திருமணம் நடந்த நிலையில் அவர்களுக்கு கதிஜா, ரஹீமா என இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் இருக்கின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மானுடன் வந்த பிரச்சனை காரணமாக சாயிரா தனியாக தான் வாழ்ந்து வந்திருக்கிறார். மனக்கசப்பு அதிகம் ஆனது, இடைவெளி தொடர்ந்து பெரிதாகி கொண்டே போனது என்றும், அதை சரி செய்ய வாய்ப்பு இல்லாத நிலையில் தான் இந்த விவாகரத்து முடிவை இருவரும் எடுத்து இருக்கின்றனர்.
பத்திரிக்கையாளர் அந்தணன்
இந்நிலையில், சாய்ரா விவாகரத்து விஷயத்தை எடுக்க என்ன காரணம் என்று பத்திரிக்கையாளர் அந்தணன் சில தகவலை கூறியிருக்கிறார். அதில், காதலித்து திருமணம் செய்த இவர்கள் கனத்த இதயத்தோடு பிரிந்திருக்கிறார்கள் என்பது பேரதிச்சியாக இருக்கிறது.
இப்படியொரு விவாகரத்து நோட்டீஸ் வரும் என்று ரஹ்மானே எதிர்ப்பார்க்கவில்லை என்று பலர் கூறுகிறார்கள். மற்ற நடிகர்களை போல் ரஹ்மான் குடும்பத்தில் இல்லை என்பதால், அதுபற்றி பேச அர்த்தமில்லை. 29 வருடம் கழித்து தங்களின் பிரிவை அறிவித்தது ஏன்? அதை சொல்லாமலே இருந்திருக்கலாமே என்ற கேள்வி நம்மிடம் எழுகிறது. அவர்கள் ஏதோ ஒரு வேகத்தில் இந்த முடிவை எடுத்துவிட்டார்கள்.
இசைப்பணி
முக்கியமான அந்த வேகம் என்ன என்றால், ரஹ்மான் இசைப்பணியில் பிஸியாகிவிட்டார். குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தப்பின் இசையில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தி வருகிறார். இசை அல்லாமல் மிகப்பெரிய நிறுவனங்களுடன் கைக்கோர்த்து புதியபுதிய பணிகள் ஆரம்பித்திருக்கிறார்.
ரஹ்மானின் இவ்வளவு பெரிய வளர்ச்சி, உயர உயர இருப்பது தான் பிரச்சனை. உடைந்த கண்ணாடி துண்டுகள் இனி ஒட்டாது என்று ரஹ்மான் கூறியிருக்கிறார். ஆனால், ரஹ்மான் தரப்பில் இருந்தும் சாய்ரா தரப்பில் இருந்தும் இதை சரி செய்யும் முடிவில் இறங்கி இருக்கிறார்கள் என்று அந்தணன் கூறியிருக்கிறார்.
மேலும் ஏ ஆர் ரகுமான் போன்ற இசை மேதையை கல்யாணம் செய்பவர் எல்லாவற்றிற்க்கும் தியாக வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும். இவ்வளவு வயதிற்குப்பின், 29 வருடத்திற்கு பின் நீங்கள் எடுத்துள்ள இந்த முடிவு, இளைய தலைமுறையினருக்கு வேறொரு பாதையை கொடுக்கும்.
அதனால் நீங்கள் மீண்டும் சேருகிறீர்கள் என்ற தகவலை எவ்வளவு வேகமாக பிரிகிறீர்கள் என்று அனுப்பினீர்களோ அதைவிட வேகத்தில் சேருகிறோம் என்பதை அறிவிக்கும்படி அந்தணன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.