அட்ஜஸ்ட் செய்து அந்த படத்தில் நடித்த நயன்தாரா.. ரகசியத்தை உடைத்த பிரபலம்!!

Nayanthara Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 27, 2024 04:30 PM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்துக்கொண்டு இருப்பவர் தான் நயனதாரா. ஹீரோயின் சென்ரிக் படங்களில் ஹிட் கொடுத்து வந்த இவர், சமீபகாலமாக தொடர் தோல்வி படங்களை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரபல பத்திரிக்கையாளர் அந்தணன், நயன்தாரா குறித்து பேசியுள்ளார். அதில் அவர், கஜினி படத்தில் நயன்தாராவை துரத்தி செல்லும் காட்சி எடுக்கப்பட்டது. அந்த காட்சியில் எடுக்கும் போது நயன்தாரா படு கவர்ச்சியான உடையில் இருந்ததால், அந்த ஆடையை மாற்றி வருமாரு ஏஆர் முருகதாஸ் கூறியுள்ளார். 

இதில் கடுப்பான நயன்தாரா, "என்னிடம் இந்த ஒரு ஆடை மட்டுமே இருக்கிறது, வேற ஆடை எடுத்து வரவில்லை" என தெரிவித்துள்ளார். அப்போது ஏஆர் முருகதாஸ் தனது உதவி இயக்குனரை அனுப்பி வைத்து ஒரு ஆடையை வாங்கி வர சொல்லியிருக்கிறார்.

அந்த சமயத்தில் கேரவன் வசதி கூட இல்லை. அதனால் நயன்தாரா படப்பிடிப்புக்காக வந்திருந்த காரின் மறைவில் ஆடையை மாற்றி இருக்கிறார். அதை எல்லாம் பார்க்காமல் அட்ஜஸ்ட் செய்து நடித்து கொடுத்துள்ளார்.  

அட்ஜஸ்ட் செய்து அந்த படத்தில் நடித்த நயன்தாரா.. ரகசியத்தை உடைத்த பிரபலம்!! | Anthanan Talk About Nayanthara