விஜய்காந்துக்கு நடந்தப்போல் விஜய்க்கும் ஏற்படும்..நட்டாத்தில் விட்டுவிடுவாங்க!! தளபதியை எச்சரித்த பிரபலம்...
அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழா
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து கட்சியை சிறப்பாக வழிநடித்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் கட்சியின் முதல் மாநாட்டினை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார். தமிழ்நாடு முழுவதும் தவெக கட்சியின் மாநாட்டை பற்றியே பேசினர்.
இப்படியொரு சூழல் இருக்கும் விஜய் நேற்று விசிகவின் ஆதவ் அர்ஜுனா எழுதிய எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவை நடத்தினார். அதற்கு விஜய் சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டார். நிகழ்ச்சியில் பேசிய விஜய், தமிழ் நாடு அரசியல் குறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் குறித்து விமர்சித்து பேசியிருந்தார்.
பத்திரிக்கையாளர் அந்தணன்
இதுகுறித்து பத்திரிக்கையாளர் அந்தணன் அளித்த பேட்டியொன்றில், விஜய்யால் மீண்டும் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. தன் மாநாட்டில் தங்களது கூட்டணியில் பாஜக, திமுகவுக்கு இடமில்லை என்று கூறியிருந்தார்.
அதேசமயம் விசிக மீது விஜய் கவனம் செலுத்தி வருவதும் அதனை திருமாவளவன் கூட்டணியில் இணைவதில் விருப்பமில்லாதது போலவும் கூறி வருகிறார். ஆனால் தேர்தல் நேரத்தில் கண்டிப்பாக இந்த கூட்டணி அமைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
விஜய்க்கும் ஏற்படும்
விஜய்யின் கவனம் தலித் அரசியலிலும், அம்பேத்கர் அரசியலிலும் மட்டும் இருந்தால் தென் மாவட்டங்களில் இருக்கும் பிற சாதியினரை விஜய்யின் கட்சியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தான் இதெல்லாம்.
முக்கியமாக விஜயகாந்த் அரசியலுக்கு வந்தப்பின் அவருடன் இருந்தவர்கள் எல்லாம் அவரை நட்டாத்தில் விட்டுவிட்டார்கள். எனவே அந்த நிலைமை விஜய்க்கும் ஏற்படலாம், அதனால் கவனம் தேவை என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு : இச்செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல் பத்திரிக்கையாளர் அந்தணன் கருத்தினைத்தான் இங்கு பதிவிட்டுள்ளோமே தவிர அவரின் கருத்துக்கும் விடுப்பு தளத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.