வெளிநாட்டு நபருடன் 2ஆம் திருமணம் செய்த கமல் அண்னன் மகள்! முதல் கணவரை பிரிய இதுதான் காரணம்!

tamil actress movie
By Jon Jan 28, 2021 10:03 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகையாகவும் தொகுப்பாளினியாகவும் திகழ்ந்து வாரிசு நடிகையாக வளம் வந்தவர் நடிகை அனு ஹாசன். நடிகர் கமல் ஹாசனின் அண்ணன் சந்திரா ஹாசனின் மகளாக சினிமாவில் அறிமுகமாகினார் அனு. இதையடுத்து பிரபல தொலைக்காட்சியில் காப்பி வித் அனு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

முன்னணி நடிகர்கள் படத்தில் சிறு கதாபாத்திரத்திலும் முக்கிய ரோலிலும் நடித்து பிரபலமான அனு ஹாசன் டெல்லியை சேர்ந்த விகாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் குறுகிய ஆண்டுகளிலேயே சில கருத்து வேறுபாடுகள் தோன்றி விவாகரத்தும் செய்துள்ளார்.

இதுபற்றி அனு ஹாசன் கூறிகையில், நாங்கள் காதலித்த போது எல்லாம் நல்லபடியாக சென்றது. ஆனால் திருமணத்துக்கு பின்னர் அப்படி இல்லை, என் திருமணத்தை காப்பாற்ற நான் முயற்சி செய்தேன், ஆனால் அது நடக்கவில்லை. என் முன்னாள் கணவர் ஒரு நல்ல மனிதர், ஆனால் எனக்கானவர் இல்லை என கூறியிருந்தார்.

இதன் பின்னர் லண்டனை சேர்ந்த கிரஹாம் ஜே என்பவருடன் காதல் வயப்பட்டார் அனுஹாசன். இதையடுத்து 2010ல் அவரை திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்ந்து வருகிறார்கள்.