கேவலப்படுத்தும் இமான்!! முக்கிய காரணமே இதுதான்!! நடிகை கொடுத்த ஷாக்கிங் தகவல்..
தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக திகழ்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருவது இமான் - சிவகார்த்திகேயன் பிரச்சனை தான். இதுகுறித்து பல பிரபலங்கள் பேட்டியளித்து பல விசயங்களை பகிர்ந்து வந்த நிலையில் நடிகை அனுபரமி சமீபத்தில் பேட்டியில் சிவகார்த்திகேயன் - இமான் விவகாரம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், பாலிவுட்டை போல இங்கும் நெப்போடிசம் நிறைய இருக்கு, வெளியில யாரும் சொல்றது இல்லை. எனக்கு பெரிய கேள்வி, இமான் எதற்கு காரணமே இல்லாமல் பேட்டி கொடுத்து சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செஞ்சிட்டாருன்னு எதுக்காக கோடிட்டு காட்டனும். இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்துவிட்டார்.
இந்த, சர்ச்சையை எப்ப வந்துருக்கனும். தன் குழந்தைக்கு எதிர்காலம் பாதிக்ககூடாதுன்னு இருக்கும் அக்கரைய எப்பவே சொல்லி இருக்கனும். குறிப்பிட்ட காரணத்திற்காக இமான் இதை செய்திருக்கிறார். யார் சினிமாவில் பாதிக்கப்படவில்லை. எல்லோருக்கும் குடி, புகையிலை, கள்ளத்தொடர்பு எல்லாமே இருக்கு.
இதை சிவகார்த்திகேயன் புதுசா அதை ஆரம்பிக்கவில்லை, அது இருக்கா இல்லையான்னு கூட தெரியவில்லை. சிவகார்த்திகேயன் பாவம், விஜேவா இருந்து இப்போது தான் நடிக்க வந்திருக்காரு.
அவரை போல் வளர்ந்து வரும் நடிகர்கள் உள்ளிட்ட பலரும் இதுபோல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். முன்னாள் இருக்கும் சீனியர்ஸ் அவர்களை உளவியல் தொடர்பாக தடுத்து வருகிறார்கள். 100 சதவீதம், சிவகார்த்திகேயனை பிடிக்காமல் இருப்பவர்கள் தான் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார் நடிகை அனுபரமி.
