என்னது டிடி-க்கு இரண்டாம் கல்யாணமா!! மாப்பிள்ளை யார் தெரியுமா?
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. கடந்த 2014ல் அவரது நண்பரும் தொழிலதிபருமான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்தார்.
ஆனால் திருமணமாகி 3 ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பின் படங்களில் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வரும் டிடி தனியாக யூடியூப் சேனல் ஆரம்பித்து சில விசயங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் டிடி விரைவில் இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார் என்ற தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கிறது.
அந்தவகையில் தற்போது குடும்ப நண்பரான கேரளாவை சேர்ந்த ஒருவரை திவ்யதர்ஷினி திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவெடுத்திருக்கிறார்களாம்.
நீண்ட நாள் தெரிந்தவர் என்பதால் டிடி-யும் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். ஆனால் இந்த விசயம் டிடி தரப்பில் இருந்தோ குடும்பத்தினர் சார்பிலோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.