நான் செஞ்ச பெரிய தப்பு.. பாலய்யாவை சீண்டிய நடிகை அனுஷ்கா செட்டி...

Anushka Shetty Gossip Today Indian Actress Nandamuri Balakrishna
By Edward Apr 27, 2025 01:30 PM GMT
Report

அனுஷ்கா செட்டி

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிக அனுஷ்கா செட்டி, ரெண்டு என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார். அருந்ததி, பாகுபலி உள்ளிட்ட பல படங்கள் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை அனுஷ்கா செட்டிக்கு கொடுத்தது.

இடையில் உடல் எடையை கூடியதால் சரியான வாய்ப்பில்லாமல் இருந்து காதி, கத்தனார் என்ற படங்களில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் அவர் 10 வருடங்களுக்கு முன் பெரிய நடிகர் படத்தில் நடித்தது தவறு என்று தெரிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நான் செஞ்ச பெரிய தப்பு.. பாலய்யாவை சீண்டிய நடிகை அனுஷ்கா செட்டி... | Anushka Says Acting In Balakrishnas Film Mistake

ஒக்க மகாடு

அதில் நடிகை அனுஷ்கா செட்டி, 2008ல் பெளியான ஒக்க மகாடு படத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்தேன். படத்தின் கதை என்ன என்று கேட்காமலேயே நடித்தேன். எனக்கு அப்படத்தில் பெரிதாக ஸ்கோப் இல்லை.

அந்த படத்தில் நடித்தது மிகவும் தவறாக கருதுகிறேன் என்று அனுஷ்கா செட்டி தெரிவித்துள்ளார். பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் இப்படத்தில் நடித்தாலும் கமர்ஷியல் ரீதியாக இப்படம் மிகப்பெரிய ஃபிளாப் படமாக அமைந்தது. இப்படத்தின் அனுஷ்கா கவர்ச்சி ஆட்டமும் போட்டிருக்கிறார்.