ஐ லவ் யூ-னு சொன்னதும் ஓகே சொல்லிட்டேன்!! நடிகை அனுஷ்கா ஷெட்டியின் காதல் ஸ்டோரி..
அனுஷ்கா ஷெட்டி
தென்னிந்திய சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. விஜய், பிரபாஸ், ரஜினி, நாகர்ஜுனா என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். சோலோ ஹீரோயினாக நடித்து முன்னணி ஹீரோக்களுக்கே டஃப் கொடுத்தார்.

இன்று பல நடிகைகள் சோலோ ஹீரோயின் கதைகளை தேர்ந்தெடுக்க முன்னோடியாக இருந்தவரும் அனுஷ்காதான்.
உடல் எடையை கூட்டியதால் அவரின் மார்க்கெட் சரிந்து சரியான வாய்ப்பும் கிடைக்காமல் போனது. இதன்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள அனுஷ்கா ஷெட்டி, தன்னுடைய காதல் குறித்து பகிர்ந்துள்ளார்.

ஐ லவ் யூ சொன்ன பையன்
அதில், நான் 6 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது ஒரு பையன் என்னிடம் ‘ஐ லவ் யூ’ என்று காதலை சொன்னான். அந்த வயதில் அதற்கு என்ன அர்த்தம் என்றுக்கூட தெரியாது.
ஆனால், அந்த பையன் அதை சொன்னதும் நான் ஓகே சொல்லிவிட்டேன். அது என் வாழ்க்கையில் அழகான நினைவுகள் என்று அனுஷ்கா தெரிவித்துள்ளார்.