41 வயதில் உடல் எடையை பாதியாக குறைத்த அனுஷ்கா.. அசந்துபோன நடிகர், நடிகைகள்
Anushka Shetty
By Kathick
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா. விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், திடீரென உடல் எடை கூடி சற்று குண்டாக மாறியதால், அனுஷ்காவிற்கு பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. இதனால் சில ஆண்டுகள் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். கடைசியாக இவர் நடித்து வெளிவந்த சைலன்ஸ் திரைப்படம் கூட படுதோல்வியடைந்தது. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளாராம் அனுஷ்கா.
தனது உடல் எடையை பாதியாக குறைத்து ஒல்லியாக மாறியுள்ளாராம். படப்பிடிப்பில் அனுஷ்காவை பார்க்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் நம்ம அனுஷ்காவா இது என்று கேட்கும் அளவிற்கு தனது தோற்றத்தை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.