அதை பார்த்து ரசிக்கிறாங்க, ஆன கல்யாணம் மட்டும் பண்ண மாட்டாங்க!! SMS பட நடிகை அனுயா ஆதங்கம்..
"சிவா மனசுல சக்தி" படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அனுயா பகவத். அதன்பின், சம்பவம், நகரம் போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். அதன்பின் சிறிய இடைவெளிக்குப் பிறகு விஜய்யின் நண்பன் படத்தில் துணை நடிகையாக நடித்தார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற அனுயா, "என்னுடைய மார்பிங் வீடியோ வெளியான சமயத்தில் நான் மிகுந்த மனவுளைச்சலில் இருந்தேன். தற்கொலை செய்துகொள்ள கூட நினைத்தேன். அந்த எண்ணத்தில் இருந்து என்னை மாற்றியது என் குடும்பம் தான். சுசி லீக் பிரச்சனைக்கு பிறகு நான் சினிமாவில் இருந்து விலகிவிட்டேன்".
மேலும் அவர் பேசுகையில்"திரைப்படத்தில் ஒரு ஐட்டம் பாடல் வந்தால் கைதட்டி பார்க்கும் ஆண்கள், அந்த பாடலில் ஐட்டம் டான்ஸ் ஆடும் பெண்ணை திருமணம் மட்டும் செய்துகொள்ள மாட்டாங்க" என்று அனுயா தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.