நம்பி ஏமாற்றிய சூப்பர் ஸ்டார் நடிகர்கள்! யாரென்று காட்ட துடிக்கும் இயக்குனர்?

vijay superstar rajinikanth armurugadss
By Edward Feb 18, 2022 05:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் அஜித்தின் தீனா படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ். இதையடுத்து கஜினி, ரமணா, 7 ஆம் அறிவு போன்ற வெற்றி படங்களை கொடுத்தார். இதன்பின் நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற தொடர் படங்களை இயக்கி கோடிகளில் சம்பளம் வாங்கினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து தர்பார் படத்தை எடுத்து வெளியிட்டார். இதையடுத்து சூப்பர் ஸ்டார் நடிகர்கள் எல்லோரும் அவரா வேண்டாம் என்று ஒதுக்கி வைத்து வருகிறார்கள். அதற்கு காரணம் காப்பி நடிகர் என்ற பெயர் எடுத்ததாலே தானாம்.

அப்படி இருக்க இயக்குனர் முருகதாஸ் புது அவதாரத்தை எடுக்கவுள்ளாராம். தம் உதவி இயக்குனர் படத்தை தயாரிக்கவுள்ளாராம். அனிமேஷன் காட்சிகள் அதிகமாக இப்படத்தில் அமைவதால் பட்ஜெட் அதிகமாக செலவு செய்யவுள்ளாராம் முருகதாஸ்.

இப்படத்தில் நடிகர் கெளதம் கார்த்திக் நாயகனாக நடிக்க புதுமுக நடிகை அறிமுகப்படுத்தவுள்ளாராம். இயக்கம் தான் யாரும் கைக்கொடுக்கவில்லை, தயாரிப்பும் கைக்கொடுக்குமா என்று புது முயற்சியினை எடுத்துள்ளார். ஏற்கனவே ஒருசில படங்கள் தயாரித்தும் இருக்கிறார் முருகதாஸ்.