அசிங்கப்படுத்தி வேண்டாம் என ஒதுக்கிய விஜய்? பட்டதெல்லாம் போதும்! இளம்நடிகர் பக்கம் திரும்பிய இயக்குநர்

vijay vikram beast ar murugadoss vijaysethupathy
By Edward Apr 07, 2022 04:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருபவர் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். இவர் எடுத்த பல படங்கள் பெரிய ஹிட் கொடுத்து ரசிகர்களை ஈர்த்தது. அதிலும் நடிகர் விஜய்யுடன் மூன்று படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார்.

ஆனால், சிலர் காப்பி படம் என்று கூறியதால் விஜய் ஏ ஆர் முருகதாஸுடம் இணைவதை நிறுத்தி வந்தார். அப்படி இருந்தாலும் விஜய்யின் அடுத்த பட கதையை கூறச்சென்றும் கதை விஜய்க்கு பிடிக்கவில்லையாம். இதனால் மறுபடியும் கதையை மாற்றி செல்ல விஜய் அசிங்கப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

இதனால் கோபத்தில் ஏ ஆர் முருகதாஸ் இளம் நடிகர்களை பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவை எடுத்துள்ளார். இது முருகதாசுக்கு கொஞ்சம் மனக்கஷ்டத்தை ஏற்படுத்திவிட்டதாம். எவ்வளவு பெரிய இயக்குனர் நான், என்னை விட்டுவிட்டு இளம் இயக்குனருடன் கூட்டு சேர்ந்து விட்டாரே என்ற கவலையும் ஒரு பக்கம் அவரை வாட்டி வதைத்துள்ளது.

என்ன தான் விஜய் இப்படி இருந்தாலும் மாஸ் படங்களை கொடுத்து மாஸ்டர் பிளாஸ்டர் ஹிட் கொடுத்தது ஏ ஆர் முருகதாஸ் படம் தானாம். இந்நிலையில் ரஜினி, விஜய், அஜித் யாரும் வேண்டாம் நான் இளம் நடிகர்களை வைத்து படம் எடுக்கிறேன் என்று கூறியிருந்தார் ஏ ஆர் முருகதாஸ்.

தற்போது சியான் விக்ரம் பக்கம் ரூட்டை போட்டுள்ளாராம். விக்ரம் படங்கள் பல வெளியாகாமல் காத்திருக்கும் சமயத்தில், விக்ரம் பக்கமாக சென்றிருக்கிறாராம். அதேபோல் விக்ரமுக்கு அடுத்து நடிகர் விஜய் சேதிபதி படத்தையும் இயக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.