மனைவிக்கு இப்படியொரு கண்டீசன் போட்டு வாயடைத்த இசைபுயல்!! மேடையில் ரகுமான் செய்த செயல்..
தமிழ் சினிமாவில் இசைப்புயலாக திகழ்ந்து தன் இசையால் இந்தியாவையே ஆட்டிப்படைத்து வருபவர் ஏ ஆர் ரகுமான். சமீபத்தில் பொன்னியின் செல்வன் படம் உட்பட பல ஹிட் பாடல்களையும் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற தனியார் ஊடகத்தின் விருதுவிழாவிற்கு சென்று இரு விருதுகளை கைப்பற்றினார் ஏ ஆர் ரகுமான். விருதினை தன் மனைவி சாய்ரா பானுவுக்கு சமர்பிப்பதற்காக மேடையில் அழைத்துள்ளார் ரகுமான்.
மேடையில் மைக் எடுத்து பேச ஆரம்பித்த மனைவி சாய்ராவிடம் இரண்டு வார்த்தை பேசுமாறு கேட்டுக்கொண்டார். பேச ஆரம்பித்த தன் மனைவியிடம், தயவு செய்து இந்தியில் பேச வேண்டாம், நீ சொல்ற விசயத்தை முடிந்தவரையில் தமிழில் கூறு என்று கண்டீசன் போட்டிருக்கிறார்.
இதை பார்த்த முன்னணி நட்சத்திரங்கள் ஏ ஆர் ரகுமான் செய்த செயலால் சிரித்தபடி ரியாக்ஷன் கொடுத்தனர். ஏற்கனவே பல மேடைகளில் இந்தி-ஆ? என்று கூறிவிட்டு இந்தியை புறக்கணித்தும் வந்துள்ளதை பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.
அதேபோல் இந்த மேடையில் ஏ ஆர் ரகுமான் செய்த செயலை பலரும் பாராட்டி வருகிறார்கள்.