ரகசியமாக விறுவிறுவென நடத்தப்பட்ட மகள் திருமணம்! யாரையும் கூப்பிடாத ஏ ஆர் ரகுமான் ஒருத்தருக்கும் மட்டுமே முன்னிலை..

A R Rahman
By Edward May 09, 2022 04:36 AM GMT
Report

இந்திய திரையுலகின் ஆஸ்கர் நாயகனும் இசைப்புயலாகவும் திகழ்ந்து வருபவர் ஏ ஆர் ரகுமான். சமீபத்தில் தன் மகள் திருமணத்தினை எளியமுறையில் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்றது.

பிரம்மாண்ட முறையில் கோலாகலமாக நடைபெறும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் சாதாரணமாக பென்னேரி பகுதியில் இருக்கும் அவரது பல ஏக்கர் சொத்துள்ள வீட்டில் நடந்துள்ளது.

ஏ ஆர் ரகுமான் நடத்தி வரும் மியூசிக் அகாடமி மாணவர்களை மட்டுமே அழைத்திருந்த ஏ ஆர் ரகுமான் சினிமாவை சேர்ந்த யாரையும் அழைக்கவில்லையாம். இதற்கு காரணம் பரவி வரும் கொரோனா வைரஸ் தான் என்று கூறப்படுகிறது.

ஆனால், இசைக்குயில் மெல்லிசை அரசி என ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடகி சுசிலா மட்டும் கல்யாணத்தில் வரவழைக்கப்பட்டுள்ளார். 86 வயதை எட்டிய சுசிலா அங்கு வந்தது முதல் காரில் ஏறி செல்லும் வரை ஏ ஆர் ரகுமான் கூட இருந்து பார்த்துக்கொண்டுள்ளாராம்.

இதுவே பெரியவர்களை எப்படி மதிக்க வேண்டும் என்று தன் மகளுக்கு கற்பித்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான்.