ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை பாதிப்பு.. மனைவி சொன்ன விஷயம்

Tamil Cinema A R Rahman Tamil Singers
By Bhavya Mar 17, 2025 06:30 AM GMT
Report

ஏ.ஆர்.ரஹ்மான்

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட்டின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை கடந்த 2008ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக வென்றார்.

தற்போது, இவர் தமிழில் தக் லைஃப், ஜீனி ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார். நேற்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்.

ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை பாதிப்பு.. மனைவி சொன்ன விஷயம் | Ar Rahman Ex Wife About Him

அவருக்கு Dehydration எனப்படும் நீரிழப்பு அறிகுறிகள் தெரிந்ததாகவும், வழக்கமான சோதனைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு இருந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாயிரா பானு இருவரும் கடந்த 29 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த வருடம் நவம்பரில் விவாகரத்தை அறிவித்தனர்.

சொன்ன விஷயம்  

தற்போது ஏ.ஆர்.ரஹ்மான் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன நிலையில் சாயிரா பானு ஒரு ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அதில், "மீடியாவில் என்னை ஏ.ஆர்.ரஹ்மானின் Ex Wife என எழுதுகிறார்கள். எங்களுக்கு இன்னும் சட்டப்படி விவாகரத்து ஆகவில்லை. நாங்கள் இன்னும் சட்டப்படி கணவன் மனைவி தான்" என கூறி இருக்கிறார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் விரைவில் குணமடைய வேண்டும் என்று விரும்புவதாகவும் கூறியுள்ளார்.  

ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நிலை பாதிப்பு.. மனைவி சொன்ன விஷயம் | Ar Rahman Ex Wife About Him