59வது பிறந்தநாள்!! ஏ ஆர் ரஹ்மானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஏ ஆர் ரஹ்மான்
சிறு வயதிலேயே தந்தையை இழந்து பல கஷ்டங்களை சந்தித்து குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு படிப்பை விட்டுவிட்டு இசைத்துறைக்குள் வந்தவர் தான் ஏ ஆர் ரஹ்மான். இளையராஜா, டி ராஜேந்தர் உள்ளிடவர்களிடம் பணியாற்றி, அடுத்தடுத்து விளம்பர படங்களுக்கு இசையத்தார் ஏ ஆர் ரஹ்மான்.

இதனையடுத்து ரோஜா படத்தில் மணிரத்னம் இயக்கத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி முதல் படத்திலேயே மிகபெரிய வெற்றியை கண்டார்.
இதனையடுத்து ஏ ஆர் ரஹ்மான் இந்திய சினிமாவின் இசையில் தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை உருவாகினார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கான இரு ஆஸ்கர் விருதுகளை பெற்றார்.
59வது பிறந்தநாள்
தற்போது இந்திய சினிமாவில் பல படங்களுக்கு இசையத்துள்ள ஏ ஆர் ரஹ்மான் தன்னுடைய 59வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிரபுதேவா நடித்துள்ள மூன்வாக் படத்திற்கும் இசையமைத்துள்ள ஏ ஆர் ரஹ்மான், படத்தின் ஆடியோ லான்சின் போது கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர்.

இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ. 10 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார். அவருக்கு ரூ. 1728 கோடி சொத்து மதிப்பினை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ், சென்னை, துபாய், முமை என பல கோடி ரூபாய் மதிப்பில் சொகுசு பங்களாவும், ஸ்டுடியோவையும் வைத்திருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.