வைரமுத்துவை ஏன் மணிரத்னம் ஒதுக்கினார். பதில் கூறாமல் மழுப்பிய இசைப்புயல்..

A R Rahman Ponniyin Selvan: I Vairamuthu Gossip Today Mani Ratnam
By Edward Sep 27, 2022 12:20 PM GMT
Report

இந்திய சினிமாவின் இசைப்புயலாகவும் ஆஸ்கர் நாயகனாகவும் திகழ்ந்து பல சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களால் ரசிகர்களை ஈர்த்து வருபவர் ஏ ஆர் ரகுமான். ரோஜா படத்தில் ஆரம்பித்து தற்போது பொன்னியின் செல்வன் படம் வரை தொடர்ந்து வருகிறார்.

இயக்குனர் மணிரத்னத்துடனாக அவரது கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது. அப்படி பொன்னியின் செல்வன் படத்திலும் ரகுமானி பின்னணி இசை மற்றும் பாடல் மிகப்பெரிய பங்காற்றவுள்ளது.

படம் வெளியாக ஒருசில நாட்கள் இருக்கும் நிலையில் மணிரத்னம் ஏன் வைரமுத்துவை ஒதுக்கினார் என்ற கேள்விகள் எழுந்து வந்தது. இதுகுறித்து சமீபத்தில் பிரஸ்மீட்டில் கூட மணிரத்னமிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், வைரமுத்துவை போல பல கலைஞர்கள் இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இதே கேள்வி கடந்த சில வருடங்களுக்கு முன் ஏ ஆர் ரகுமானிடம் கேட்கப்பட்டது.

அதற்கு ரகுமான், இதுகுறித்து மணிரத்னம் அவர்கள் கூறுவார் பதில் கூறாமல் மழுப்பி இருக்கிறார். அதேபோல் தான் மணிரத்னம் சமீபத்தில் கூறி விளக்கமளித்திருக்கிறார்.