இந்த அசிங்கம் தேவையா அறந்தாங்கி நிஷா.. விஜய் டைலாக் பேசி வாங்கி பல்பு
Aranthangi Nisha
Barathi Kannamma
By Parthiban.A
அறந்தாங்கி நிஷா இத்தனை நாள் விஜய் டிவியில் காமெடி மட்டுமே செய்து கொண்டிருந்தார். அதற்கும் தற்போது வாய்ப்பு குறைந்துவிட இப்போது சீரியலில் நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் பாரதி கண்ணம்மா தொடரில் ஒரு சின்ன ரோலில் நடிக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நிஷா எப்போதும் காமெடியான பல வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். பாரதி கண்ணம்மாவில் ஹேமா என்கிற ரோலில் நடித்து வரும் குழந்தை நட்சத்திரத்துடன் சேர்ந்து ஒரு ரீல்ஸ் வீடியோ செய்து இருக்கிறார் அவர்.
'நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் டா' என விஜய் வசனத்தை நிஷா சொல்ல, அந்த குழந்தையோ "நான் படிக்கவே இல்ல.. முட்டாள்! வெளியே போ" என சொல்கிறார். இந்த அசிங்கம் தேவையா அறந்தாங்கி நிஷா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.