அப்பா மரணத்துக்குப்பின் அம்மா செய்த துரோகம்!! தனிமையில் வாழும் நடிகை சரண்யா உருக்கம்..
இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் 2004ல் வெளியான காதல் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை சரண்யா. இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து காணாமல் போனார்.
சரண்யா
சமீபத்திய பேட்டியொன்றில் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த போராட்டங்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

அதில், சின்ன வயதில் என் அப்பா இறந்துவிட்டார். அதன்பின் 19 வயசு இருக்கும்போது என் அம்மா இன்னொரு கல்யாணம் செய்து கொண்டு போய்விட்டார். அதன்பின் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். என்னை யாருமே கண்டுக்கொள்ளவில்லை. 19 வயது என்பது வாழ்க்கையை தனியாக எதிர்கொள்ள வேண்டிய வயது கிடையாது, அந்த வயசில் ஒரு குழந்தைக்கு அம்மாவின் அரவணைப்பும் அப்பாவின் பாதுகாப்பும் தேவைப்படும், ஆனால் அது எல்லாமே இல்லாமல் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன்.
அம்மா வெறொரு வாழ்க்கைக்குள் போய்விட்டப்பின் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைத்தேன், ஆனாலும் அம்மாவை சமாதானப்படுத்தி மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ வேண்டுமென்று முயற்சித்தேன். ஆனால் அது எதுவும் பலனளிக்கவில்லை. என் அம்மாவை கன்வின்ஸ் பண்ணிப் பார்த்தும் நடக்காததால் பின் நான் தனியாகவே வாழ தொடங்கிவிட்டேன்.
எனக்கும் அம்மாவுடன் இருக்க வேண்டுமென்று ஆசை இருக்கு, ஆனால் அதுதான் நடக்கவில்லை வேறு என்ன பண்ண? இப்போதும் சில நேரங்களில் எனக்கு நாம் செத்து போய்விடலாமா என்றுகூட அந்த இறப்பை வெளியில் சொல்லக்கூட யாரும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கும். தனியாக இருக்கும்போது மனம் ரொம்ப குழப்பமடையும் என்று கண்ணீரை அடக்கியவாறு உருக்கமாக பேசியிருக்கிறார் நடிகை சரண்யா.

திருமண வாழ்க்கை
மேலும், திருமண வாழ்க்கையிலும் சிக்கல்கள் ஏற்பட்டது. இப்போதைய காலக்கட்டத்தில் கல்யாணம் பண்ணி ஒருத்தருடன் சந்தோஷமாக வாழ ஆசைத்தான், ஆனால், அதைவிட ரொம்ப பயமாக இருக்கிறது.
எல்லார் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்துவிட்டோம் என்று நினைக்கும் நேரத்தில் சில பழைய காயங்கள் தனிமையில் நம்மை மீண்டும் தொந்தரவு செய்யும். அந்தமாதிரியான சூழ்நிலைதான் சரண்யாவிற்கும் வந்திருக்கிறது.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பயம் மரணம் அல்லா, தன்னைப்பற்றி கவலைப்படுவதற்கு யாரும் இல்லாமல் போய்விடுவார்களோ என்ற பயம் தான் என்றும் பேசியுள்ளார்.