அர்ச்சனா பிக் பாஸ் டைட்டில் வின்னர் இல்ல.. குழப்பத்தில் ரசிகர்கள்
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் 7 ஆவது சீசன் ரியாலிட்டி ஷோ பெரும் வரவேற்பை பெற்றது.
ரெட் கார்ட் சம்பவம் வினுஷா விவகாரம் என்று பல சர்ச்சைகள், சண்டைகள் என அனைத்துமே அதிக அளவில் இருந்தன. பிக் பாஸ் சீசன் 7 இன்று grand finale நடைபெற இருக்கிறது.
இதில் டைட்டில் பட்டத்தை அர்ச்சனா தட்டி சென்றார் என்றும் இரண்டாவது இடத்தில் மணியும், மூன்றாவது இடத்தில் மாயாவும் பிடித்துள்ளார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் பிக் பாஸ் விமர்சகரும், திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர், பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் பட்டம் அர்ச்சனா வெல்லவில்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் ஆரம்பத்தில் இருந்து விளையாட்டை விளையாடி மாயா, தினேஷ் முதல், இரண்டு இடங்களை பிடித்து உள்ளனர் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
தற்போது இவரின் பேச்சு பிக் பாஸ் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.