அதை பார்த்தால் பயம்.. போனி கபூர் மகனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா!
தற்போது கோலிவுட்டில் டாப் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார் போனி கபூர். அவர் அஜித்தின் அடுத்த படத்தை தற்போது தயாரித்து வருகிறது. அஜித்தின் முந்தைய இரண்டு படங்களையும் அவர் தான் தயாரித்தார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் போனி கபூர் படம் தயாரித்து வருகிறார். ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் குடும்பத்தில் எல்லோருமே சினிமாவில் தான் இருக்கிறார்கள். அவரது மகன் அர்ஜுன் கபூர், மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள்.
அர்ஜுன் கபூர் 36 வயதாகும் நிலையில் 48 வயதாகும் நடிகை மலைக்கா அரோராவை விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார்.

அர்ஜுன் கபூர் பற்றி பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்ன தெரியுமா. அவருக்கு மின்விசிறி fanஐ பார்த்தால் பயமாம். அப்படி ஒரு போபியா அவருக்கு. அதனால் அவரது வீட்டில் ஒரு ceiling fan கூட இருக்காது என தெரிவித்து இருக்கிறார்.