கழட்டிவிட்ட சூர்யா, வாரிசு நடிகரிடம் தஞ்சமடைந்த இயக்குனர் பாலா..
பாலா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வணங்கான். இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்து வந்தார். ஆனால், படப்பிடிப்பில் சூர்யாவிற்கும் இயக்குனர் பாலாவிற்கும் ஏற்பட்ட சில பிரச்சனையால் சூர்யா இப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.
இதனால் வணங்கான் திரைப்படம் கைவிடப்படவில்லை. சூர்யா நடித்து வந்த கதாபாத்திரத்தில் வேறு யார் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதர்வா நடிப்பார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில், தற்போது அந்த கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்கவில்லை என்றும், சூர்யா நடிக்கவிருந்த ஹீரோ கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகனும், முன்னணி நடிகருமான அருண் விஜய் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா கழட்டிவிட்ட இந்த நிலையால் தற்போது வாரிசு நடிகரிடம் தஞ்சமடைந்துள்ளார் என்று இப்போதே கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட துவங்கிவிட்டது.