திருமணத்திற்கு முன்பே மனைவியுடன் அதற்கு ஆசை!! அந்த காட்சிக்கு கண்டீசன் போட்ட மனைவி.. அருண் விஜய்..
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து அதிக கவனத்தை ஈர்த்து வரும் நடிகர் அருண் விஜய், சமீபத்தில் மிஷன் சாப்டர் 1 படத்தில் நடித்துள்ளார். கடந்த வாரம் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் குறைவான தியேட்டர்களில் மட்டுமே ஒளிப்பரப்பாகி வந்த நிலையில் அதன் எண்ணிக்கை தற்போது கூட்டப்பட்டிருக்கிறது. இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பேட்டியும் அளித்து வரும் அருண் விஜய், தன் மனைவி ஆர்த்தியுடன் நேர்காணலில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
திருமணம் செய்தால் வீட்டில் பார்க்கும் பெண்ணைத்தான் கல்யாணம் செய்வேன் என்று சத்தியம் செய்ததை பற்றி அருண் விஜய் மனைவியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஆர்த்தி, அதெல்லாம் தெரியாது. முதல் நாள் நாங்கள் பார்த்ததும் 2 மணி நேரம் பேசினோம். அவரை பார்க்க போகிறோம் என்று சொன்னதும், சாப்பிட்டால் உள்ளே இறங்காது என என்னால் 2 நாள் சாப்பிட முடியவில்லை. எங்கள் கல்யாணம் டக்கு டக்கு என்று முடிந்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.
இதற்கு அருண் விஜய், இந்த பொண்ணை தான் பார்த்திருக்கிறோம் என்று என் வீட்டில் என்னை சம்மதிக்க வைக்கிறார்கள். குடும்ப பெண் என்று என் குடும்பத்தினர் நணர்கள் எல்லோரும் சொன்னார்கள். ஓகே நான் பார்க்கிறேன், ஆனால் தனியாக சென்று ரெண்டு பேரும் பேச வேண்டும். அதன்பின் எல்லோரும் அவருடன் அங்கு வந்தாங்க. குடும்பமே கன்பார்ம் செய்துவிட்டு இருந்ததால் எனக்கு ஒரு பயம் வந்துவிட்டது.
அவர்கள் வீட்டுக்கு சென்றதும், தனியாக பேச கேட்டால் அங்கு 20 பேர் இருந்தார்கள். அக்காவிடம் கேட்டு தனியாக பேச சென்றோம். அப்போது எவ்வளவு பெரிய ஹீல்ஸ் போட்டிருக்கீங்க என்று கேட்டதும் நீங்களே பாத்துக்கோங்க என்று காமித்தார்கள். அதன்பின் வீட்டிற்கு செல்ல நினைத்த போது அவர்கள் ஒரு பார்வை பார்த்தார்கள். அதில் விழுந்ததும் வரேன் மாமா என்று சொல்லி தான் ஓகே சொன்னதாக அருண் விஜய் தெரிவித்திருக்கிறார்.
அதன்பின் 3 மாதத்திலேயே எங்கள் திருமணம் முடிந்துவிட்டது என்று ஆர்த்தி கூறியிருக்கிறார். நடிகையுடன் இதெல்லாம் பண்ணக்கூடாது என்று சொன்னேன் என்று மனைவி தெரிவித்தார். அப்போது தடம் படத்தில் என் கண்டீசனை சொன்னேன்.
அப்படத்தில் நெருக்கமான காட்சி மனைவி இல்லாத போது எடுத்து முடித்துவிட்டேன். டிரைலர் பார்த்துவிட்டு, ஏன் என் கிட்ட அந்த காட்சி இருப்பதை சொல்லவில்லை என்று ஆர்த்தி கேட்டு அடி வாங்கியதாகவும் அருண் விஜய் தெரிவித்திருக்கிறார்.