நீங்களே இப்படி புக் பண்ணா நாங்க எங்க போறது! சூப்பர் ஸ்டாரால் புலம்பும் இயக்குனர்கள்..

superstar sivakarthikeyan rajinikanth boneykapoor thalaivar170 arunrajakamraj
By Edward Feb 20, 2022 07:03 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் ரஜினிகாந்தின் 169 வது படத்தினை டாக்டர், பீஸ்ட் படத்தினை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிரூத் இசையமைக்கவுள்ளார்.

வரும் மார்ட் மாதம் ஆரம்பித்து தீபாவளிக்கு வெளியிட திட்டம் போட்டுள்ளார்கள் படக்குழு. இதைதொடர்ந்து தலைவரின் 170வது படம் யாராக இருக்கும் என்ற பட்டியல் அதிகமாக இருந்தது. அதற்கு செக் போட்டுள்ளார் அருண்ராஜா காமராஜ்.

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பருன் இயக்குனருமான அருண்ராஜா தலைவர் 170 படத்தின் இயக்குனராக கமிட்டாகியுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் இப்படத்திலும் பாடல் எழுது வாரே என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். இப்படத்தினை போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் படத்தில் கதாநாயகி யார் என்ற கேள்வியும் எழுந்து வருகிறது. மேலும் பல இயக்குனர்கள் சூப்பர் ஸ்டாருக்காக கதை எழுதி காத்திருக்கும் சமயத்தில் சம்பந்தமே இல்லாமல் புக் செய்து கதை எழுதும் இயக்குனரை பிடிக்கிறாரே இவர் என்று பல இயக்குனர்கள் ஷாக்காகி புலம்பி வருகிறார்கள்.